TNPSC Thervupettagam

இனச்சேர்க்கை நிகழாமலேயே முட்டையிட்ட முதலை

June 15 , 2023 531 days 303 0
  • இனச்சேர்க்கை நிகழாமலேயே முதலை முட்டையிட்ட ஒரு நிகழ்வினை (ஆண் துணை இல்லாமல்) பதிவு செய்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
  • கோக்குயிட்டா எனப் பெயரிடப்பட்ட இந்த முதலையானது பார்க் ரெப்டிலாண்டியா எனப்படும் கோஸ்டாரிக்கா உயிரியல் பூங்காவில் 16 ஆண்டுகளாகத் தனியாக வசித்து வந்தது.
  • 2018 ஆம் ஆண்டில், அது அடைத்து வைக்கப்பட்டிருந்தக் கூண்டில் 14 முட்டைகளின் அடைவு கண்டுபிடிக்கப் பட்டது.
  • அந்த முட்டைகளுள் ஒன்றில் முழுமையாக உருவம் பெற்ற முதலையின் கரு இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது.
  • ஆண் இனம் இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் திறன் விலங்கினங்களில் புதிதல்ல.
  • இது ஃபேகல்டேட்டிவ் பார்த்தீனோஜெனீசிஸ் (நிலைமாற்று இனப்பெருக்கம்) என்று அழைக்கப் படுகிற நிலையில், இதன் மூலம் பெறப்பட்ட குட்டிகள் தாயின் டிஎன்ஏவை மட்டுமே பெற்றுள்ளன.
  • இது முன்னர் பாம்புகள் மற்றும் பல்லிகள் மற்றும் சில வகையான மீன்களான சுறாக்கள், திருக்கை மீன் மற்றும் கொடுவா மீன் ஆகியவற்றில் காணப்பட்டது.
  • இருப்பினும், க்ரோகோடிலியா வரிசையில் இது போன்ற ஒரு நிகழ்வு ஆவணப்படுத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்