TNPSC Thervupettagam

இன்சைட் தரையிறங்கு கலம்

October 31 , 2023 263 days 186 0
  • செவ்வாய்க் கிரகத்தின் திரவ இரும்பு கருவமானது முழுமையாக உருகிய சிலிக்கேட் அடுக்குகளால் சூழப்பட்டுள்ளது.
  • இன்சைட் செவ்வாய்க் கோள் தரையிறங்கு கலமானது, செவ்வாய் கிரகத்தின் உள் பகுதியில் ஊடுருவிச் செல்லும் நில அதிர்வு அலைகளை பதிவு செய்வதற்கான உட்பகுதி கட்டமைப்பின் நில அதிர்வு சோதனைக் கருவி (SEIS) என்ற கருவியைப் பயன்படுத்தியது.
  • பூமியைப் போலல்லாமல் செவ்வாய்க் கோளின் கருவத்தினைச் சுற்றி உருகிய அடுக்கு உள்ளது.
  • செவ்வாய்க் கிரகத்தின் திரவ இரும்பு-நிக்கல் கருவமானது சுமார் 150 கிலோமீட்டர் தடிமன் கொண்ட உருகிய சிலிக்கேட் பாறையால் சூழப்பட்டுள்ளது என்று இந்தப் புதிய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
  • இந்த மேல் அடுக்கு ஆனது முன்னதாக கருவத்தின் மேற்பரப்பு என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.
  • 2,080 மைல் விட்டம் கொண்ட கருவத்தின் அளவானது, முன்பு நினைத்ததை விட 30% அளவு சிறியதாக இருக்கக்கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்