தலைமைச் செயலகத்தில் 'இன்ட்கோ தேநீர் வண்டிகள்' எனப்படும் 20 தேநீர் மற்றும் உணவு விநியோக வண்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இவை சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒரு திட்டத்தின் (SADP - Special Area Development Programme) ஆதரவுடன் Indcoserve’ என்ற நிறுவனத்தின் பல்வேறு தேநீர் வகைகளை வாடிக்கையாளர்களிடம் விநியோகம் செய்ய உள்ளன.
சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அவை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.