TNPSC Thervupettagam

இன்புளூயன்சா தொடர்பான அனைத்துத் தரவுகளையும் பகிர்தல் குறித்த உலகளாவிய முன்னெப்பு

April 11 , 2020 1692 days 540 0
  • இன்புளூயன்சா தொடர்பான அனைத்துத் தரவுகளையும் பகிர்தல் குறித்த உலகளாவிய முன்னெடுப்புடன் (GISAID - Global Initiative on Sharing All Influenza Data) கரோனா வைரஸின் 9 முழுவதுமான மரபணுத் தொடர்களையும் இந்தியா பகிர்ந்துள்ளது.
  • இது புனேவில் உள்ள தேசிய நச்சுயிரியல் நிறுவனத்தினால் பகிரப் பட்டதாகும்.
  • மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில், கரோனா வைரஸ் அல்லது கோவிட் – 19ன் மரபணுவைத் தொடராக்கம் செய்த உலகின் 5வது நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது. 
  • இதில் 621 என்ற அளவில் அமெரிக்கா அதிக எண்ணிகையைப் பகிர்ந்து உள்ளது. அதைத் தொடர்ந்து ஐக்கியப் பேரரசு (350), பெல்ஜியம் (253), மற்றும் சீனா (242) ஆகியன உள்ளன.
  • உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (Centre for Cellular and Molecular Biology), அறிவியல்சார் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கழகம் (Council of Scientific and Industrial Research) மற்றும் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (Institute of Genomics and Integrative Biology) ஆகியவை கோவிட் – 19ன் மரபணு வரிசை முறையாக்கலில் பணியாற்றுகின்றன.
  • மரபணு வரிசை முறையாக்கம் என்பது டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ ஆகியவற்றிற்குள் காணப்படும் மரபணுத் தகவல்களை படிக்க மற்றும் விளக்கமளிக்க நமக்கு உதவும் ஒரு தொழில்நுட்பமாகும்.
  • இது வைரஸின் பரிணாமம் குறித்து அறிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப் படுகின்றது.
  • சார்ஸ் கோவிட் வைரசை மரபணு வரிசை முறையாக்கம் செய்வது கீழ்க்கண்ட பலன்களை அளிக்கும்
    • வைரஸ் எங்கிருந்து வந்தது?
    • இந்தியாவில் வித்தியாசமான வகைகள் பரவுகின்றனவா?
    • எவ்வாறு வைரஸ் பரவுகின்றது?
  • GISAID என்பது பல்வேறு நாடுகளுக்காக மரபணு வரிசை முறை குறித்து பகிர்ந்து கொள்வதற்காக 2008 ஆம் ஆண்டில் உலகச் சுகாதார அமைப்பினால் தொடங்கப்பட்ட ஒரு பொதுத் தளமாகும்.
  • 2010 ஆம் ஆண்டில் GISAID தளத்தை அதிகாரப் பூர்வமாக ஏற்படுத்திய நாடு ஜெர்மனியக் கூட்டாட்சிக் குடியரசு ஆகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்