இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை (ISF - Infosys Science Foundation) தனது 10-வது ஆண்டு விழாவில் இன்போசிஸ் பரிசு 2018-க்கான ஆறு வெற்றியாளர்களை வெவ்வேறு பிரிவுகளில் அறிவித்துள்ளது.
நவகாந்தா பட் - பொறியியல் மற்றும் கணினி அறிவியல்
கவிதா சிங் – மானுடவியல்
ரூப் மாலிக் - வாழ்க்கை அறிவியல்
நளினி அனந்த ராமன் - கணித அறிவியல்
S.K. சதீஷ் - இயற்பியல் அறிவியல்
செந்தில் முல்லைநாதன் - சமூக அறிவியல்
இன்போசிஸ் பரிசானது இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள், சமூக ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளையால் வழங்கப்படும் வருடாந்திர விருதாகும்.
ஒவ்வொரு பிரிவிலும் விருது பெறுவோர் 22 காரட் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசுப் பணம் ஆகியவற்றைப் பெறுவர்.
இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் மிக உயர்ந்த பணப் பரிசுகளில் இதுவும் ஒன்றாகும்.