முன்னாள் லைபீரிய அதிபரான எல்லன் ஜான்சன் சர்லீப்–பிற்கு 2018 ஆம் ஆண்டிற்கான ஆப்பிரிக்கத் தலைமைத்துவத்தில் சாதனை புரிந்தமைக்கான இப்ராஹிம் பரிசு (Ibrahim Prize for Achievement in African Leadership) வழங்கப்பட்டுள்ளது.
எல்லன் ஜான்சன் சர்லீப் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க நாட்டுப் பெண் தலைவராவார் (first elected female head of state in Africa).
மேலும் எல்லன் ஜான்சன் சர்லீப் இவ்விருதைப் பெறும் முதல் பெண் தலைவருமாவார்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவிக்காலத்தில் மெச்சத்தகுந்த முறையில் சிறப்பாக தலைமையாற்றிய தலைவர்களுக்கு ஆப்பிரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருதே ஆப்பிரிக்கத் தலைமைத்துவத்தில் சாதனை புரிந்தமைக்கான இப்ராஹிம் பரிசு ஆகும்.
பரிசுக்குத் தகுதியானவர் கடைசி மூன்றாண்டுகளில் தன்னுடைய பதவிக்காலத்தை முடித்திருக்க வேண்டும்
எல்லன் ஜான்சன் சர்லீப் ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் 12 ஆண்டுகள் அதிபராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பதவிக்காலம் இவ்வாண்டின் ஜனவரி 22ஆம் தேதியுடன் முடிவடைந்தது.