இமயமலைப் பகுதியின் பருவநிலையில் தூசுப் படலங்களின் தாக்கம்
December 19 , 2023 342 days 203 0
அகமதாபாத்தில் அமைந்த இஸ்ரோவின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL) ஆனது, "தூசுப் படலங்கள் இமயமலையை சூடாக்குகின்றன" என்று கண்டறிந்துள்ளது.
இது இந்து குஷ்-இமயமலை-திபெத்திய பீடபூமி (HKHTP) பகுதியில் பருவநிலை மாற்றத்தைத் தூண்டும் முக்கிய காரணியாக இருக்கும்.
புவியின் தாழ்மட்ட வளிமண்டலத்தின் மொத்த வெப்பமயமாதல் காரணிகளில் (தூசுப் படலங்கள்+ பசுமை இல்ல வாயுக்கள்) 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தூசுப் படலங்கள் மட்டுமே ஆகும்.
இது நிலத்திலமைந்த ஆய்வகத்தின் கண்காணிப்பு, செயற்கைக்கோள் தரவு மற்றும் மாதிரி உருவகப்படுத்துதல்களை உள்ளடக்கிய முதல் பகுப்பாய்வு ஆகும்.