இமயமலைப் பனிப்பாறை ஏரிகள் வேகமாக விரிவடைந்து, சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
2011 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்த ஏரிகள் பரப்பளவில் 10.81% விரிவடைந்தன என்பதோடு இது பெரும்பாலும் பருவநிலை மாற்றத்தினால் உந்தப்பட்டது.
இந்திய நிலப்பரப்பு பக்கம் அமைந்த பனிப்பாறை ஏரிகள் அதே காலகட்டத்தில் 33.7% விரிவடைந்துள்ளன.
இந்தியாவில் மட்டும் 67 ஏரிகள் அளவில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக விரிவடைந்து உள்ள நிலையில் இது அவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் மிகவும் அதிகமாக உள்ளதைக் குறிக்கிறது.
இந்தியாவில் 2011 ஆம் ஆண்டில் தோராயமாக 1,962 ஹெக்டேராக இருந்த பனிப்பாறை ஏரிகளின் பரவலானது, 2024 ஆம் ஆண்டில் 2,623 ஹெக்டேராக விரிவடைந்தது.
ஒட்டு மொத்த இமயமலைத் தொடர் முழுவதும், 2011 ஆம் ஆண்டில் சுமார் 533,401 ஹெக்டேராக இருந்த பனிப்பாறை ஏரிகளின் பரப்பளவு ஆனது 2024 ஆம் ஆண்டில் 591,108 ஹெக்டேராக விரிவடைந்தது.