இமயமலை வயாகரா என்றும் அழைக்கப்படும் ஒபியோகார்டைசெப்ஸ் சினென்சிஸ் ஆனதுஒரு வகைப் பூஞ்சையாகும்.
இது உலகின் மிகவும் விலை உயர்ந்த பூஞ்சையாகும்.
இது இமயமலை மற்றும் திபெத்தியப் பீடபூமிகளை மட்டுமே பூர்வ வாழ்விடமாக கொண்டு காணப்படுகின்றது. இது சீனா, நேபாளம், பூடான் மற்றும் இந்தியாவில் காணப்படுகின்றது.
இது இந்தியாவில் மிக முக்கியமாக உத்தரகாண்டின் பித்தோர்கார்க் மற்றும் சமோலி போன்ற மாவட்டங்களில் காணப்படுகின்றது.
சமீபத்தில் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் (IUCN - International Union for Conservation of Nature) “அச்சுறுத்தலுக்குள்ளான உயிரினங்களுக்கான” சிவப்புப் பட்டியலில் வகைப்படுத்தி உள்ளது.
IUCN ஆனது இந்தப் பூஞ்சையை “அழிவாய்ப்பு இனமாக” வகைப்படுத்தி உள்ளது.