TNPSC Thervupettagam

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் 75வது ஸ்தாபன தினம் - ஏப்ரல் 15

April 18 , 2023 493 days 169 0
  • இமாச்சலப் பிரதேசம் மாகாணமானது 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று தலைமை ஆணையர் மாகாணமாக உருவாக்கப்பட்டது.
  • இந்தச் சமயத்தில் மாகாண அளவிலான செயல்பாடுகள் பழங்குடியினர் பகுதியான லாஹுல்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள காசாவில் மேற்கொள்ளப்படும்.
  • பின்னர், 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று இமாச்சலம் ஒரு ‘C’ பிரிவு மாநிலமாக மாற்றப்பட்டது.
  • 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று இமாச்சலப் பிரதேசம் ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
  • 1966 ஆம் ஆண்டில், பஞ்சாபின் மலைப்பகுதிகள் இமாச்சலப் பிரதேசத்தில் சேர்க்கப் பட்டன.
  • 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று, நாடாளுமன்றம் இமாச்சலப் பிரதேச சட்டத்தை நிறைவேற்றியது.
  • 1971 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று, இமாச்சலப் பிரதேசம் முழு அளவிலான மாநிலமாகவும் நாட்டின் 18வது மாநிலமாகவும் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்