தொடர் சங்கிலி அடிப்படையிலான மென்பொருள் நிறுவனமான இன்பெய்ன் ஃபின்டெக், இமுல்யா எனும் தளத்தினை 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இது இந்தியாவில் உள்ள வங்கியல்லாத நிதியளிக்கும் நிறுவனங்களுக்கு திறன் வாய்ந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான சொத்து பாதுகாப்புப் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு உதவும் அறிவார்ந்த தொடர் சங்கிலி அமைப்பாகும்.
இந்த இமுல்யாவானது அங்கீகாரம் பெற்ற கடன்கள் மற்றும் சொத்துத் தரவுகளை இணைய தளத்தில் இணைக்கவும் முழுமையான நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையில் முதலீட்டாளர்கள், மூலதாரர்கள், வழங்குநர்கள், மதிப்பீட்டு முகவர்கள் மற்றும் சேவைகள் ஆகியோர் பாதுகாப்பான ஒரு சுழற்சியை நிர்வகிக்கவும் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்துகிறது.