இயற்பியல் ஆய்வாளர்கள் இயக்கவியல் அடிப்படையிலான முதல் கியூபிட்ஸ்களை உருவாக்கியதன் மூலம் துளிமக் கணினி தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்து உள்ளனர்.
இயக்கவியல் அடிப்படையிலான கியூபிட்ஸ்கள் ஒரே நேரத்தில் பல நிலைமைகளில் செயல்படக் கூடிய சிறிய அமைப்புகள் ஆகும்.
அவை மின்னணு நிலைகளை விட அதிர்வு நிலைகளை அதிகம் சார்ந்துள்ளன.
இந்தப் பண்பு ஆனது நீண்ட ஒத்திசைவு நேரங்களை பெற வழிவகுக்கிறது.
மிகவும் வழக்கமான மின்காந்த கியூபிட்ஸ்கள் பெரும்பாலும் சில குறுகிய ஒத்திசைவு நேரங்களைக் கொண்டிருப்பதால், அவை அவற்றின் பயன்பாடுகளை மிகவும் நன்கு கட்டுப்படுத்துகின்றன.
இயக்கவியல் அடிப்படையிலான கியூபிட்ஸ்கள் மிக நீண்ட ஒத்திசைவு நேரங்களை வழங்குவதனால் இந்தக் குறைபாட்டினை நிவர்த்தி செய்ய உதவும்.