மார்ச் மாதத்தில் மாநில சட்டசபையில் இரண்டாவது முறையாக ஏற்றுக் கொள்ளப் பட்ட இயங்கலை சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் ஒரு மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் தனது ஒப்புதலினை அளித்துள்ளார்.
இந்த மசோதாவானது, இயங்கலை ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட இயங்கலை சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது புதிய ஆனால் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தத் திறன் சார்ந்த விளையாட்டுத் துறைக்கு ஒரு பலத்த அடியாகும்.
சமீபத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது ஏப்ரல் 06 ஆம் தேதியன்று, 2021 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் இயங்கலை விளையாட்டுத் தொடர்பான புதிய திருத்தங்களை அறிவித்தது.
பணப் பரிமாற்றம் சம்பந்தப்பட்ட, பணத்தினைப் பணயம் வைக்கும் வகையிலான விளையாட்டுகள் இந்தியாவில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பினைப் பல்வேறு சுயாதீன-ஒழுங்குமுறை அமைப்புகளிடம் (SROs) இது வழங்கியது.
முன்னதாக, இந்த விளையாட்டுகளின் எதிர்மறையான விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், "இயங்கலை சார்ந்த சூதாட்ட விளையாட்டுகளை" தடை செய்யும் புதிய சட்டத்திற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காகவும் ஓய்வு பெற்ற நீதிபதி K. சந்துரு அவர்களின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றினைத் தமிழ்நாடு அரசு அமைத்தது.