TNPSC Thervupettagam

இயற்கையான இளம்பிள்ளை வாதத் தீநுண்மி அற்ற ஆப்பிரிக்கா

August 31 , 2020 1457 days 552 0
  • ஆப்பிரிக்கவானது, சுதந்திரமான ஒரு அமைப்பான ஆப்பிரிக்கப் பிராந்திய சான்றிதழ் ஆணையத்தினால் இயற்கையான  இளம்பிள்ளை வாதத் தீநுண்மி அற்ற ஒரு கண்டமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் இயற்கையான இளம்பிள்ளை வாதத்  தீநுண்மி ஒழிக்கப்பட்டதற்குச் சான்றளிக்கும் பொறுப்பு ஆப்பிரிக்கப் பிராந்திய சான்றிதழ் ஆணையத்திற்கு உள்ளது.
  • ஆப்பிரிக்காவின் கடைசி  இயற்கையான இளம்பிள்ளை வாதத்  தீநுண்மியினால் ஏற்பட்ட பாதிப்பானது 2016 ஆம் ஆண்டில் நைஜீரியாவின் வடகிழக்கில் போர்னோ மாநிலத்தில் கண்டறியப் பட்டது.
  • இளம்பிள்ளை வாதத் தீநுண்மியானது தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மட்டுமே காணப்படுகிறது.
  • இந்தியாவானது 2014 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக இளம்பிள்ளை வாதம் அற்ற ஒரு நாடாக அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்