TNPSC Thervupettagam

இயற்கையில் காணப்படும் முதல் கட்டமைப்பு மூலக்கூறு

April 16 , 2024 223 days 305 0
  • சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் குழுவானது இயற்கையில் காணப்படும் முதல் கட்டமைப்பு (ஒரே மாதிரியான கிளையமைப்புகள்) மூலக்கூறினைக் கண்டறிந்து உள்ளது.
  • அவர்கள் ஒரு சயனோபாக்டீரியத்திலிருந்து சிட்ரேட் சின்தேஸ் எனப்படுகின்ற ஒரு நுண்ணுயிர் நொதியைக் கண்டறிந்தனர்.
  • இது தன்னியல்பாக சியர்பின்ஸ்கி முக்கோணம் எனப்படும் ஓர் வடிவில் திரள்கிறது.
  • அவற்றின் தனிப்பட்டப் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒரு முழு கட்டமைப்பின் வடிவத்தை ஒத்திருக்கும்.
  • பெரியது முதல் சிறியது வரை மீண்டும் மீண்டும் வரும் இத்தகைய வடிவங்கள் பகுவல் கட்டமைப்பு எனப்படும்.
  • சியர்பின்ஸ்கி முக்கோணம் என்பது சிறிய முக்கோணங்களால் ஆன முக்கோணங்களின் முடிவில்லா தொடரமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்