இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் சார்ந்த வேலைவாய்ப்புகளில் முறையான வேலைவாய்ப்பு 2024
December 18 , 2024 31 days 88 0
இந்த அறிக்கையானது ரியாத் நகரில் நடைபெற்ற UNCCD அமைப்பின் COP 16 என்ற மாநாட்டில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையானது இந்தத் தொடரின் இரண்டாவது அறிக்கையாகும் என்பதோடு இதன் முதல் பதிப்பு 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின்படி, உலகின் இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் (NbS) சார்ந்த வேலைவாய்ப்புகளில் சுமார் 93-95 சதவீதம் ஆனது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் குவிந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) ஆனது இதில் முக்கியப் பங்காற்றுகிறது.
NbS மூலம் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் மூலம் உலகளவில் பயனடைந்த 59 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் ஆவர்.
57 சதவீதச் செலவினம் ஆனது, அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்படுகிறது, அதே சமயம் ஆசிய-பசிபிக் பகுதியானது உலகளாவிய NbS செலவினத்தில் 44 சதவீதப் பங்கினை கொண்டுள்ளது.
உலகளவில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 சதவீதம் மட்டுமே NbS மூலம் பங்களிக்கப் படுகிறது.