2018 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று மத்திய ஆயுஷ் அமைச்சகமானது (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) முதலாவது இயற்கை மருத்துவ தினத்தை இந்தியா முழுவதும் அனுசரித்தது.
இத்தினமானது உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் மூலம் நோய்களைத் தடுப்பதற்காக மருந்தில்லா மருத்துவ அமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய மன்றமானது நவம்பர் 14 முதல் நவம்பர் 18 வரை மருத்துவ முகாம்கள், பயிலரங்கம் மற்றும் கண்காட்சிகள் ஆகியவற்றை நடத்தியது.
புதுதில்லியின் பாலாஜி நிரோக்தாமில் சமூக மண் குளியல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 700 நபர்கள் மண் குளியலை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஒரு உலக சாதனையாகும். தற்பொழுது இந்நிகழ்ச்சியானது ஆசிய சாதனைகள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை மருத்துவ சிகிச்சையின் 5 இயற்கை முறைகளில் மண் குளியலும் ஒன்றாகும்.