இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஹாப்ஃபீல்டு மற்றும் ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய சக்தி வாய்ந்த இயந்திரக் கற்றலின் அடிப்படையை உருவாக்கும் பல்வேறு முறைகளை உருவாக்குவதற்காக அவர்கள் இயற்பியல் கருவிகளைப் பயன்படுத்தி உள்ளனர்.
ஜான் ஹாப்ஃபீல்ட் ஓர் இணை நினைவு தொடர்புறு நினைவகத்தை உருவாக்கினார், இதனால் தரவுகளில் உள்ள படங்கள் மற்றும் பிற வடிவங்களைச் சேமித்து அதனை மறு கட்டமைக்க முடியும்.
ஜெஃப்ரி ஹிண்டன், தரவுகளில் உள்ள பண்புகளைத் தானாகவே கண்டறியும் ஒரு முறையைக் கண்டுபிடித்துள்ளார் என்ற நிலையில், இது படங்களில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை அடையாளம் காண வழி வகுக்கிறது.
2023 ஆம் ஆண்டிற்கான பரிசு ஆனது எலக்ட்ரான்கள் கொண்டு அவர்கள் ஆற்றியப் படைப்பிற்காக இயற்பியலாளர்களான ஆன் எல்'ஹுல்லியர், பியர் அகோஸ்டினி மற்றும் ஃபெரென்க் க்ராஸ்ஸுக்கு வழங்கப்பட்டது.