TNPSC Thervupettagam

இயற்பியலுக்கான நோபல் பரிசு

October 9 , 2019 1748 days 704 0
  • ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் குலோஸ் ஆகியோர் 2019 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.
  • பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் "பிரபஞ்சத்தில் பூமியின் இடம்" ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப் பட்டது.
  • இந்த விருதின் ஒரு பாதியானது "இயற்பியல் அண்டவியலின் கோட்பாடு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக" ஜேம்ஸ் பீபிள்ஸுக்கு வழங்கப் பட்டது.
  • இந்த விருதின் மற்றொரு பாதியானது "சூரியனைப் போன்ற நட்சத்திரத்தைச் சுற்றும் ஒரு வெளிக் கோளைக் கண்டுபிடித்ததற்காக" மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் குலோஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • இவர்கள் 9 மில்லியன் க்ரோனர் (918,000 அமெரிக்க டாலர்) மதிப்புடைய  நிதித் தொகை, தங்கப் பதக்கம் மற்றும் பட்டயச் சான்றிதழ் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்