ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் ஆனது கீழ்க்காணும் 3 விஞ்ஞானிகளை இயற்பியலுக்கான நோபல் பரிசிற்காக தேர்ந்தெடுத்துள்ளது.
ஆர்தர் ஆஷ்கின் (அமெரிக்கா)
ஜெரார்டு மௌரோ (பிரான்ஸ்)
டோன்னா ஸ்டிரிக்லேண்ட் (கனடா)
இவர்கள் லேசர் இயற்பியல் துறையில் சாதனை படைத்துள்ள கண்டுபிடிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் நோபல் பரிசைப் பெற்ற மிக வயதான அறிவியலாளராக 96 வயதான ஆர்தர் ஆஷ்கின் உள்ளார்.
இவர் ஒளியியல் இடுக்கி மற்றும் உயிரியலில் அவற்றின் பயன்பாடு ஆகியவற்றிற்காக இப்பரிசைப் பெறுகிறார்.
ஜெரார்டு மௌரோ மற்றும் டோன்னா ஸ்டிரிக்லேண்ட் ஆகிய இருவரும் தங்களது புதுமையான தொழில்நுட்பமான குற்றொலி துடிப்புப் பெருக்கத்தின் கண்டுபிடிப்பிற்காக (chirped pulse amplification- CPA) கூட்டாக பரிசு பெறுகின்றனர்.
1903ல் மேரி கியூரி மற்றும் 1963ல் மரியா கோபர்பெர்ட்மேயர் ஆகியோருக்கு அடுத்து இயற்பியலில் நோபல் பரிசு பெறும் 3வது பெண்மணியாக டோன்னா ஸ்டிரிக்லேண்ட் ஆகியுள்ளார்.