இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் ஒரு புதிய கை தொற்று நீக்கும் திரவம்
March 19 , 2020 1715 days 599 0
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் வரும் இமாலய உயிரிவளத் தொழில்நுட்ப மையத்தை (Council of Scientific and Industrial Research-Institute of Himalayan Bioresource Technology – CSIR-IHBT) சேர்ந்த விஞ்ஞானிகள் இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் ஒரு புதிய கை தொற்று நீக்கும் திரவத்தை உருவாக்கியுள்ளனர்.
விஞ்ஞானிகள் தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் தேயிலைக் கூறுகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி ஒரு புதிய கை தொற்று நீக்கும் திரவத்தை உருவாக்கியுள்ளனர்.
ட்ரைக்ளோசன், பாராபென்ஸ், பித்தலேட்டுகள் மற்றும் செயற்கை வாசனையூட்டும் பொருள் போன்ற இரசாயனங்கள் கை தொற்று நீக்கும் திரவத்தின் உற்பத்தியில் பொதுவாகப் பயன்படுத்தப் படுகின்றன.
இந்த வேதிப்பொருட்கள் எதுவும் CSIR அமைப்பால் உற்பத்தி செய்யப்படும் புதிய கை தொற்று நீக்கும் திரவத்தின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுவதில்லை.