TNPSC Thervupettagam

இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் ஒரு புதிய கை தொற்று நீக்கும் திரவம்

March 19 , 2020 1586 days 546 0
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் வரும்  இமாலய உயிரிவளத் தொழில்நுட்ப மையத்தை (Council of Scientific and Industrial Research-Institute of Himalayan Bioresource Technology CSIR-IHBT) சேர்ந்த விஞ்ஞானிகள் இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் ஒரு புதிய கை தொற்று நீக்கும் திரவத்தை உருவாக்கியுள்ளனர்.
  • விஞ்ஞானிகள் தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் தேயிலைக் கூறுகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி ஒரு புதிய கை தொற்று நீக்கும் திரவத்தை உருவாக்கியுள்ளனர்.
  • ட்ரைக்ளோசன், பாராபென்ஸ், பித்தலேட்டுகள் மற்றும் செயற்கை வாசனையூட்டும் பொருள் போன்ற இரசாயனங்கள் கை தொற்று நீக்கும் திரவத்தின் உற்பத்தியில் பொதுவாகப் பயன்படுத்தப் படுகின்றன.
  • இந்த வேதிப்பொருட்கள் எதுவும் CSIR அமைப்பால் உற்பத்தி செய்யப்படும் புதிய கை தொற்று நீக்கும் திரவத்தின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்