TNPSC Thervupettagam

இரசாயனப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு நாள் - நவம்பர் 30

November 30 , 2022 633 days 242 0
  • இந்தத் தினமானது இரசாயனப் போரினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதோடு, இரசாயன ஆயுதங்களைத் தடை செய்யும் அமைப்பிற்கான உறுதிப்பாட்டினையும் உறுதிப்படுத்துகிறது.
  • மேலும் இது அமைதி, பாதுகாப்பு மற்றும் பலதரப்பு இலக்குகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது, ஐக்கிய நாடுகள் சபையினால் (UN) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டு 2005 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப் படுகிறது.
  • முன்னதாக, இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையானது 1997 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ஏப்ரல் 29 ஆம் தேதியானது இத்தினத்தினை அனுசரிப்பதற்கான தேதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இதற்கிடையில், அதற்குப் பதிலாக ஏப்ரல் 29 ஆம் தேதியானது "சர்வதேச இரசாயன ஆயுதத் தடை அமைப்பின் துவக்க தினம்" என்று நியமிக்கப்பட்டது.
  • 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற, இரசாயன ஆயுத உடன்படிக்கைக்கான 20வது பங்கு தாரர்கள் மாநாட்டில் இந்தத் தினத்திற்கான தேதியானது நவம்பர் 30 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்