மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆனது, தற்போது 'வெண்மைப் பிரிவு-மாசு ஏற்படுத்தாத' துறையானது இரண்டு முக்கிய அனுமதிகளைப் பெறாமல் தொழிற் சாலைகளை நிறுவவும் இயக்கவும் அனுமதிக்கிறது.
விதிகளுக்கான இணக்கச் சுமையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காரணம் காட்டி ‘மாசுபாடு ஏற்படுத்தாத’ பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இரட்டை ஒப்புதல் முறையில் சுற்றுச்சூழல் அனுமதி (EC) மற்றும் புதியத் தொழில்களை அமைப்பதற்கான ஒப்புதல் (CTE) ஆகியவை அடங்கும்.
குறைந்தபட்ச அல்லது மிகக் குறைவான மாசுபாட்டை ஏற்படுத்துவதாக அதிகாரப் பூர்வமாக மதிப்பிடப்பட்ட தொழிற்சாலைகள் இத்துறை அமைச்சகத்தின் வெண்மைப் பிரிவிற்குள் அடங்கும்.
அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வப் பட்டியலில் இது போன்று மொத்தம் 39 தொழில் துறைகள் உள்ளன.