வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் (Curbing Tax Evasion), இரு நாடுகளுக்குமிடையே முதலீட்டுப் போக்கை (Flow of investment) ஊக்குவிப்பதற்கும் இந்தியா மற்றும் ஹாங்காங் ஓர் இருதரப்பு இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (Bilateral double taxation avoidance treaty) கையெழுத்திட்டுள்ளன.
ஹாங்காங்கானது இந்தியாவின் முக்கிய நிதியியல் மற்றும் வர்த்தக கூட்டுப் பங்களிப்பாளராகும்.
முன்னாள் பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங் சீனாவின் சிறப்பு நிர்வகிப்புப் பிராந்தியமாகும் (Special Administrative Region). இது உயர்நிலை தன்னாட்சியை (High degree of autonomy) அனுபவித்து வருகின்றது.
இதன் மூலம் ஹாங்காங் தன்னிச்சையான வரிவிதிப்பு முறையைக் (Independent Taxation System) கொண்டுள்ளது.
நிதி ஏய்ப்புத் தடுப்பு (Prevention of Fiscal Evasion) மற்றும் இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தமானது ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதிக்கும் (Hong Kong Special Administrative Region - HKSAR), இந்தியாவிற்கும் இடையே முதலீட்டுப் போக்கை அதிகரிப்பதோடு இவ்விரண்டிற்குமிடையே தொழில்நுட்பம் மற்றும் தொழில் வல்லுநர்களின் பரிமாற்றத்தை அதிகரிக்கும்.
மேலும் இது தனிப்பட்ட வரி விதிப்பு அமைப்பையும் (Independent taxation system) கொண்டுள்ளது.