வருமானத்தின் மீதான வரிகளில் மேற்கொள்ளப்படும் வரி ஏய்ப்பை தடுக்கவும். இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பதற்காகவும் (DTAA – Double Taxation Avoidance Agreement.), சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்துடன்(HKSAR – Hong Kong Special Administrative ) ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தமானது இரட்டை வரி விதிப்பை தடுக்கவும், அது சார் தகவல்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ளவும் உதவும்.
வரி ஏய்ப்பை தடுக்கவும், வரி சார் விவகாரங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரவும் இந்த ஒப்பந்தம் உதவும்.