இந்தியா மற்றும் ஈரான் இடையே வருமானம் மீதான வரிகள் தொடர்பாக வரி ஏய்ப்புத் தடுப்பு (Prevention of Fiscal Evasion) மற்றும் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பிற்கான (Avoidance of Double Taxation) ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தமானது பரஸ்பரம் இரு நாடுகளுக்கிடையே முதலீட்டுப் போக்கை (flow of investment) அதிகரிப்பதோடு இரட்டை வரி விதிப்பைத் தடுப்பதற்காக இரு நாடுகளுக்கிடையே தொழில்நுட்பம் மற்றும் வல்லுநர்களின் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும்.
வரி ஏய்ப்பினைத் தடுப்பதற்கு தகவல்களின் பரிமாற்றத்திற்காக வருமானத்தின் மீதான இரட்டை வரி விதிப்பைத் தவிர்க்க பிற நாடுகளுடன் அல்லது குறிப்பிட்ட பகுதிகளுடன் இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசிற்கு 1961 ஆம் ஆண்டினுடைய வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 90 -ன் (Section 90 of Income Tax Act, 1961) கீழ் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.