TNPSC Thervupettagam

இரட்டை வளிமண்டலவியல் ஆய்வுக் கலன்

May 20 , 2022 828 days 488 0
  • பூமியின் வளிமண்டலத்தில் நிகழும் விண்வெளிச் சார்ந்த வானிலை நிகழ்வுகளின் விளைவுகளைப்  பற்றித் தகவல் சேகரிப்பதற்காக இஸ்ரோ ஒரு இரட்டை வளிமண்டல வியல் ஆய்வுக் கலனை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
  • பூமியின் உயரடுக்கு வளிமண்டலத்தில் விண்வெளி சார்ந்த வானிலை நிகழ்வுகளால் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையில் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதற்கு DISHA-H&L ஆய்வுப் பணி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தில் இரண்டு செயற்கைக் கோள்கள்  அனுப்பப்படும்.
    • உயர் சாய்வு சுற்றுப்பாதையில் ஒன்றும் (DISHA-H)
    • தாழ்மட்ட சாய்வு சுற்றுப்பாதையில் ஒன்றுமாக (DISHA-L) இவை நிலை நிறுத்தப் படும்.
  • DISHA என்பது ''Disturbed and Quiet time Ionosphere-Thermosphere systems at High Altitudes' என்பதன் சுருக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்