TNPSC Thervupettagam

இரட்டை வெள்ளிக் கம்பிக் காரி

January 16 , 2024 185 days 190 0
  • இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பெருக்கப் பகுதிகளில் புதிய வகை வெள்ளிக் கம்பிக் காரி வண்ணத்துப்பூச்சி இனம் கண்டறியப் பட்டுள்ளது.
  • சிகரிடிஸ் கான்ஜுன்க்டா அல்லது "இரட்டை வெள்ளிக்கம்பிக்காரி" என்று பெயரிடப் பட்ட இந்த தனித்துவமான இனமானது, முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் தென்பட்டது.
  • 1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை பல்லுயிர்ப் பெருக்கத்தில் இது போன்ற முதல் கண்டுபிடிப்பு இதுவாகும்.
  • லைக்கேநிடே குடும்பத்தைச் சேர்ந்த 30 இரட்டை வெள்ளிக்கம்பிக்காரி வண்ணத்துப் பூச்சிகளை அறிவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்தியாவில், 16 வகையான வெள்ளிக்கம்பிக்காரி வண்ணத்துப்பூச்சிகள் உள்ள நிலையில் அவற்றில் 11 தீபகற்ப இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்