இரண்டாம் உலகப்போர் நினைவு அருங்காட்சியகம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சங்லாங் (Changlang) மாவட்டத்தில் துவங்கப்பட்டது. மியான்மர் எல்லையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியத்தை அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா கந்தூ துவங்கி வைத்தார்.
பழம்பெரும் வரலாறு பெற்ற ஸ்டில்வெல் சாலையை அடுத்து அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை இரண்டாம் உலகப்போரின் போது உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவாக மத்திய கலாச்சார அமைச்சகம் கட்டியுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட பொருட்கள், படைவீரர்களின் உடைமைகள் மற்றும் தங்ஸா (Tangsa) இன மக்களின் பழம்பெரும் பொருட்கள் போன்றவை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.