சமீபத்தில் முதன்முறையாக லேசர் குறுக்கீட்டுமானி ஈர்ப்பு அலை ஆய்வகத்தைச் (LIGO - Laser Interferometer Gravitational Wave Laboratory) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கருந்துளைகளின் முதலாவது ஒன்றிணைதலைப் பதிவு செய்துள்ளனர். இந்தக் கருந்துளைகள் சமமற்ற நிறைகளைக் கொண்டுள்ளன.
இந்த நிகழ்வானது GW190412 என்று பெயரிடப் பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது பொதுச் சார்பியலின் ஐன்ஸ்டீன் கோட்பாட்டை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளது.
இந்தக் கோட்பாடானது உயர் ஒத்திசைவுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதாவது ஈர்ப்பு அலைகள் அடிப்படை அதிர்வெண்ணை விட 2 அல்லது 3 மடங்கு அதிகமாகும்.
இவற்றில் ஒன்றானது சூரியனின் நிறையை விட 30 மடங்கு அதிகமானதாகவும் மற்றொன்று சூரியனின் நிறையை விட 8 மடங்கு அதிகமானதாகவும் உள்ளன.
சூரிய நிறை என்பது வானியலில் உள்ள இதர மற்ற நிறைகளின் நிறைகளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு நிறை மதிப்பீடாகும்.
1 சூரிய நிறை என்பது 2 x 1030 கிலோ கிராமிற்குச் சமமானதாகும்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் சக்தி வாய்ந்த உணர்த்துக் கருவிகளினால் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்பு அலை சமிக்ஞைகளுக்குப் பின்னர் இது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த உண்மையான ஒன்றிணைதல் நிகழ்வானது 2.5 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது.
LIGO பற்றி
LIGO என்பது ஒரு மிகப்பெரிய அளவிலான இயற்பியல் சோதனை மற்றும் ஆய்வு மையமாகும்.
இது காஸ்மிக் அல்லது அண்ட ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவதற்காகவும் ஈர்ப்பு அலை கூர் நோக்குகளை ஒரு வானியல் கூறாக மேம்படுத்துவதற்கும் வேண்டி பணியாற்றுகின்றது.
லேசர் குறுக்கீட்டு மானியின் உதவியுடன் ஈர்ப்பு அலைகளைக் கண்டறியும் நோக்கத்துடன் அமெரிக்காவில் 2 மிகப்பெரிய ஆய்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
கருந்துளை என்பது எந்தவொரு துகள் (பொருள்) அல்லது ஒளியானது அதன் இழுவிசையிலிருந்து வெளியேற்றப் படாத, வலிமையான ஈர்ப்பு விசையைக் கொண்ட மிகவும் அடர்த்தியான விண்வெளியில் உள்ள ஒரு பொருளாகும்.
ஏனெனில் எந்தவொரு ஒளியும் இதிலிருந்து வெளியேற முடியாது. அதனால் இது கருப்பு நிறத்தாலும் கண்ணுக்குத் தெரியாத வடிவிலும் உள்ளது.