TNPSC Thervupettagam

இரண்டு கருந்துளைகள் ஒன்றிணைதல்

May 3 , 2020 1670 days 846 0
  • சமீபத்தில் முதன்முறையாக லேசர் குறுக்கீட்டுமானி ஈர்ப்பு அலை ஆய்வகத்தைச் (LIGO - Laser Interferometer Gravitational Wave Laboratory) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கருந்துளைகளின் முதலாவது ஒன்றிணைதலைப் பதிவு செய்துள்ளனர். இந்தக் கருந்துளைகள் சமமற்ற நிறைகளைக் கொண்டுள்ளன. 
  • இந்த நிகழ்வானது GW190412 என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வானது பொதுச் சார்பியலின் ஐன்ஸ்டீன் கோட்பாட்டை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளது.
  • இந்தக் கோட்பாடானது உயர் ஒத்திசைவுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதாவது ஈர்ப்பு அலைகள் அடிப்படை அதிர்வெண்ணை விட 2 அல்லது 3 மடங்கு அதிகமாகும்.
  • இவற்றில் ஒன்றானது சூரியனின் நிறையை விட 30 மடங்கு அதிகமானதாகவும் மற்றொன்று சூரியனின் நிறையை விட 8 மடங்கு அதிகமானதாகவும் உள்ளன.
  • சூரிய நிறை என்பது வானியலில் உள்ள இதர மற்ற நிறைகளின் நிறைகளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு நிறை மதிப்பீடாகும்.
  • 1 சூரிய நிறை என்பது 2 x 1030 கிலோ கிராமிற்குச் சமமானதாகும். 
  • 5 ஆண்டுகளுக்கு முன்னர் சக்தி வாய்ந்த உணர்த்துக் கருவிகளினால் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்பு அலை சமிக்ஞைகளுக்குப் பின்னர் இது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்த உண்மையான ஒன்றிணைதல் நிகழ்வானது 2.5 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது.

LIGO பற்றி
  • LIGO என்பது ஒரு மிகப்பெரிய அளவிலான இயற்பியல் சோதனை மற்றும் ஆய்வு மையமாகும்.
  • இது காஸ்மிக் அல்லது அண்ட ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவதற்காகவும் ஈர்ப்பு அலை கூர் நோக்குகளை ஒரு வானியல் கூறாக மேம்படுத்துவதற்கும் வேண்டி  பணியாற்றுகின்றது.
  • லேசர் குறுக்கீட்டு மானியின் உதவியுடன் ஈர்ப்பு அலைகளைக் கண்டறியும் நோக்கத்துடன் அமெரிக்காவில் 2 மிகப்பெரிய ஆய்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. 
  • கருந்துளை என்பது எந்தவொரு துகள் (பொருள்) அல்லது ஒளியானது அதன் இழுவிசையிலிருந்து வெளியேற்றப் படாத, வலிமையான ஈர்ப்பு விசையைக் கொண்ட மிகவும் அடர்த்தியான விண்வெளியில் உள்ள ஒரு பொருளாகும்.
  • ஏனெனில் எந்தவொரு ஒளியும் இதிலிருந்து வெளியேற முடியாது. அதனால்  இது கருப்பு நிறத்தாலும் கண்ணுக்குத் தெரியாத வடிவிலும் உள்ளது. 
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்