இந்திய ராணுவத்தின் துணைநிலை படைத்தலைவர் பாரத் பன்னு இரண்டு கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் அவர் தனிநபராக மேற்கொண்ட விரைவான சைக்கிள் ஓட்டத்திற்காக இது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரின் முதல் சாதனையானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று லே முதல் மணாலி (472 கி.மீ. தொலைவு) வரையில் வெறும் 35 மணி 25 நிமிடங்களில் அவர் மேற்கொண்ட சைக்கிள் பயணமாகும்.
இவரது இரண்டாவது சாதனை 5,942 கி.மீ. நீளமுடைய தங்க நாற்கரப் பாதையில் அவர் 14 நாட்கள், 23 மணி 52 நிமிடம் என்ற நேரத்தில் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாகும்.
தங்க நாற்கரப் பாதை டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளை இணைக்கின்றது.