இராமநாதபுரத்தில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் கேரளாவின் கொச்சி கடற்கரையில் இருந்து தலா ஒரு புதிய விலாங்கு மீன் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த காங்கிரிட் விலாங்கு மீன் இனங்கள் என்பவை அரியோசோமா பேரினத்தைச் சேர்ந்தவை ஆகும்.
மன்னார் வளைகுடாவில் இருந்து கண்டறியப்பட்ட இந்த இனங்களுக்கு 'அரியோ சோமா கன்னணி' என்று பெயரிடப் பட்டுள்ளது.
கேரளக் கடற்கரையிலிருந்து கண்டறியப்பட்ட இனங்களுக்கு, அதன் உருவவியல் தன்மைகளுக்கு ஏற்ப 'அரியோசோமா கிரேசில்' என்று பெயரிடப்பட்டுள்ளன.
இந்தப் புதியக் கண்டுபிடிப்புடன், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து ஆறு விலாங்கு மீன் இனங்களையும், கேரளாவில் இருந்து 12 விலாங்கு மீன் இனங்களையும் கண்டறிந்ததற்கான பெருமை தேசிய மீன் மரபணு வள வாரியத்தினை சேர்ந்துள்ளது.