TNPSC Thervupettagam

இரண்டு புதிய விலாங்கு மீன் இனங்கள்

February 5 , 2024 293 days 348 0
  • இராமநாதபுரத்தில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் கேரளாவின் கொச்சி கடற்கரையில் இருந்து தலா ஒரு புதிய விலாங்கு மீன் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த காங்கிரிட் விலாங்கு மீன் இனங்கள் என்பவை அரியோசோமா பேரினத்தைச் சேர்ந்தவை ஆகும்.
  • மன்னார் வளைகுடாவில் இருந்து கண்டறியப்பட்ட இந்த இனங்களுக்கு 'அரியோ சோமா கன்னணி' என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • கேரளக் கடற்கரையிலிருந்து கண்டறியப்பட்ட இனங்களுக்கு, அதன் உருவவியல் தன்மைகளுக்கு ஏற்ப 'அரியோசோமா கிரேசில்' என்று பெயரிடப்பட்டுள்ளன.
  • இந்தப் புதியக் கண்டுபிடிப்புடன், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து ஆறு விலாங்கு மீன் இனங்களையும், கேரளாவில் இருந்து 12 விலாங்கு மீன் இனங்களையும் கண்டறிந்ததற்கான பெருமை தேசிய மீன் மரபணு வள வாரியத்தினை சேர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்