இரத்தம் உறையாமை பாதிப்பிற்கான மனித மரபணு சிகிச்சை முறை
February 25 , 2025 39 days 100 0
வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) ஆனது, இந்த நோய்க்கான லென்டிவைரல் நோய்க் கடத்திகளை மிக நன்கு பயன்படுத்தி முதல் மனித மரபணுச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
VIIIவது இரத்த உறைவுக் காரணியின் குறைபாட்டால் ஏற்படும் கடுமையான இரத்தப் போக்கு கோளாறு இரத்தம் உறையாமை ஆகும்.
இது தன்னிச்சையான உள் மற்றும் வெளிப்புற இரத்தப்போக்கு நிகழ்வுகளுக்கு வழி வகுக்கிறது.
இந்தியா உலகிலேயே அதிகளவிலான இரத்தம் உறையாமை பாதிப்பினைக் கொண்டு உள்ள இரண்டாவது நாடாகும்.