இரப்பர் உற்பத்தித் துறைக்கான நிதி உதவியானது 23% உயர்த்தப்பட்டு, 576.41 கோடி ரூபாயில் இருந்து 708.69 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த 2 நிதியாண்டுகளுக்கு (2024-25 மற்றும் 2025-26) கிடைக்கப் பெறும்.
இது ‘இயற்கை இரப்பர் உற்பத்தித் துறையின் நிலையான மற்றும் உள்ளார்ந்த மேம்பாடு’ என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
2024-25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளில் வழக்கமான உற்பத்திப் பகுதிகளில் 12,000 ஹெக்டேர் பரப்பில் 43.50 கோடி ரூபாய் செலவில் இரப்பர் செடி நடவு மேற்கொள்ளப் படும்.
இதற்காக உதவித் தொகையானது ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.