TNPSC Thervupettagam

இரயில் நிலையத்தில் உலர் மீன் விற்பனை நிலையம்

March 6 , 2023 632 days 379 0
  • மதுரை இரயில் நிலையத்தில் இந்தியாவின் முதல் உலர் மீன் (கருவாடு) விற்பனை நிலையமானது திறக்கப்பட்டுள்ளது.
  • தற்போது மதுரை இரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் கூட விற்பனை செய்யப் படுகின்றன.
  • ஒவ்வோர் ஊரின் பிரபலமான உள்ளூர் தயாரிப்புப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், இரயில்வே நிர்வாகம் அந்தந்த மாவட்ட இரயில் நிலையங்களில் "ஒரு நிலையம், ஒரு பொருள்" என்ற திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை அமைத்து வருகிறது.
  • நாடு முழுவதும் உள்ள சுமார் 5,000 இரயில் நிலையங்கள் இத்தகைய விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளன.
  • மேலும், தெற்கு இரயில்வே நிர்வாகத்தின் பின்வரும் மற்ற ஆறு இரயில் வழித் தடங்களில் உள்ள இரயில் நிலையங்களில், பிரபலமான உள்ளூர் தயாரிப்புப் பொருட்கள் விற்பனை செய்யப் படுகின்றன.
    • திண்டுக்கல் இரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள்,
    • தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சி இரயில் நிலையத்தில் மக்ரூன் எனப்படும் இனிப்பு வகை,
    • இராமேஸ்வரம் இரயில் நிலையத்தில் கடல் பாசி பொருட்கள்,
    • கோவில்பட்டி இரயில் நிலையத்தில் தேங்காய் மிட்டாய்,
    • விருதுநகர் மற்றும் சாத்தூர் இரயில் நிலையத்தில் காரச்சேவு,
    • தென்காசி மற்றும் செங்கோட்டை இரயில் நிலையத்தில் மூங்கில் சார்ந்தத் தயாரிப்புப் பொருட்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்