மதுரை இரயில் நிலையத்தில் இந்தியாவின் முதல் உலர் மீன் (கருவாடு) விற்பனை நிலையமானது திறக்கப்பட்டுள்ளது.
தற்போது மதுரை இரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் கூட விற்பனை செய்யப் படுகின்றன.
ஒவ்வோர் ஊரின் பிரபலமான உள்ளூர் தயாரிப்புப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், இரயில்வே நிர்வாகம் அந்தந்த மாவட்ட இரயில் நிலையங்களில் "ஒரு நிலையம், ஒரு பொருள்" என்ற திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை அமைத்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள சுமார் 5,000 இரயில் நிலையங்கள் இத்தகைய விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளன.
மேலும், தெற்கு இரயில்வே நிர்வாகத்தின் பின்வரும் மற்ற ஆறு இரயில் வழித் தடங்களில் உள்ள இரயில் நிலையங்களில், பிரபலமான உள்ளூர் தயாரிப்புப் பொருட்கள் விற்பனை செய்யப் படுகின்றன.
திண்டுக்கல் இரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள்,
தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சி இரயில் நிலையத்தில் மக்ரூன் எனப்படும் இனிப்பு வகை,
இராமேஸ்வரம் இரயில் நிலையத்தில் கடல் பாசி பொருட்கள்,
கோவில்பட்டி இரயில் நிலையத்தில் தேங்காய் மிட்டாய்,
விருதுநகர் மற்றும் சாத்தூர் இரயில் நிலையத்தில் காரச்சேவு,
தென்காசி மற்றும் செங்கோட்டை இரயில் நிலையத்தில் மூங்கில் சார்ந்தத் தயாரிப்புப் பொருட்கள்.