மத்திய இரயில்வே அமைச்சகமானது கூகுள் கலை மற்றும் பண்பாட்டு சங்கத்துடன் இணைந்து இரயில் பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதை https://artsandculture.google.com/project/indian-railways என்ற இணையதளம் மூலம் அணுக முடியும்.
இது இந்தியாவின் இரயில் பாரம்பரியத்தை தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஆன்லைனில் கதையாக சொல்லும் தளத்தில் வெளிப்படுத்துவதற்கான முதலாவது திட்டமாகும்.
இது இந்தியாவிலும் முழு ஆசிய பசிபிக் பிராந்தியத்திலும் மிகப்பெரிய கலாச்சார பண்பாட்டு டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆகும்.