TNPSC Thervupettagam

இரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தி - மே 07

May 10 , 2022 839 days 502 0
  • வங்காள நாட்காட்டியின்படி, இரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தியானது போயிசாக்கின் 25 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.
  • ஆங்கில நாட்காட்டியின்படி, இது 2022ஆம் ஆண்டு மே 07 அன்று கொண்டாடப் படுகிறது.
  • இந்த ஆண்டு இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 161வது பிறந்தநாளாகும்.
  • இரவீந்திரநாத் தாகூர் கொல்கத்தாவில் உள்ள ஜோராசங்கோ தாகுர்பாய் என்னும் இடத்தில் 1861 ஆம் ஆண்டு மே மாதம் 07ஆம் தேதியன்று பிறந்தார்.
  • கல்விச் சேவையை வழங்குவதற்காக இவர் சாந்திநிகேதனைத் தோற்றுவித்தார்.
  • பின்னர் இது விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக உருமாறியது.
  • இவர் கீதாஞ்சலி, பிகாரினி, காபுலிவாலா, அமர் சோனார் பங்களா, ஜன கன மன மற்றும் பல இலக்கியங்கள், பாடல்கள் மற்றும் கவிதைகளை எழுதியுள்ளார்.
  • இவர் தனது வாழ்நாளில் சுமார் 2230 பாடல்களை எழுதியுள்ளார்.
  • இவர் தனது வாழ்நாளின் கடைசி 13 வருடங்களில், சுமார் 3000 ஓவியங்களை வரைந்து தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்