TNPSC Thervupettagam

இராஜஸ்தான் நிறுவன தினம்

April 3 , 2022 841 days 465 0
  • மார்ச் 30 அன்று, இராஜஸ்தான் மாநிலம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக இராஜஸ்தான் திவாஸ் (இராஜஸ்தான் நிறுவன தினம்) அனுசரிக்கப்படுகிறது.
  • 1949 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று, இந்திய ஒன்றியத்துடன் இரஜபுத்தினப் பகுதிகளை இணைத்ததையடுத்து இராஜஸ்தான் மாநிலமானது உருவாக்கப்பட்டது.
  • இராஜஸ்தான் மாநிலத்தின் 73வது நிறுவன தினமானது இந்த ஆண்டு கொண்டாடப் பட்டது.
  • இந்தியாவில் பரப்பளவில் மிகப்பெரிய மாநிலமாக திகழ்வது இராஜஸ்தான் மாநிலம் ஆகும்.
  • இந்தியாவின் 4% புவியியல் பரப்பினை இராஜஸ்தான் கொண்டுள்ளது.
  • மக்கள்தொகை ரீதியாக இராஜஸ்தான் இந்தியாவின் 7வது பெரிய மாநிலமாகும்.
  • இம்மாநிலத்தில் ரந்தம்பூர் தேசியப் பூங்கா (சவாய் மதோபூர்), சரிஸ்கா புலிகள் காப்பகம் (ஆல்வார்) மற்றும் முகுந்தரா மலை புலிகள் காப்பகம் (கோட்டா) என்று 3 தேசியப் புலிகள் காப்பகங்கள் உள்ளன..
  • இராஜஸ்தான் அரசர்களின் நிலம் எனவும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்