இராஜஸ்தான் சட்டமன்றம் வலுக்கட்டாயமாக, மோசடி அல்லது தூண்டுதலால் மேற் கொள்ளப் படும் மத மாற்றங்களைத் தடுப்பதற்காக் என ஒரு மசோதாவை அறிமுகப் படுத்தியுள்ளது.
இதற்கு 2025 ஆம் ஆண்டு சட்டவிரோத மதமாற்றத் தடை மசோதா எனப் பெயரிடப் பட்டுள்ளது.
இந்த மசோதாவானது, சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் குறைந்த பட்சம் 15,000 ரூபாய் அபராதத்துடன் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று இந்த மசோதா கூறுகிறது.
18 வயதிற்குட்பட்ட ஒருவர், ஒரு பெண் அல்லது பட்டியலிடப்பட்ட சாதியினர் அல்லது பட்டியலிடப் பட்ட பழங்குடியினரை (SC/ST) இலக்காக வைத்து சட்டவிரோதமாக மத மாற்றம் செய்தால், இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரையில் தண்டனை விதிக்கப்படும் மற்றும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
சட்ட விரோதமானக் கூட்டு மத மாற்றத்திற்கு, குறைந்தபட்சம் ஆக 50,000 ரூபாய் அபராதத்துடன் மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப் படும்.