இங்கிலாந்தின் டோர்செட்டின் ஜுராசிக் கடற்கரையின் செங்குத்துப் பாறைகளில் வரலாற்றுக்கு முந்தைய காலக் கட்டத்தில் வாழ்ந்த ஒரு இராட்சத கடல் வாழ் உயிரினத்தின் பிரம்மாண்டமான மண்டை ஓடு கண்டறியப் பட்டுள்ளது.
இந்த மண்டை ஓடு ஆனது சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ப்ளியோசர் எனப்படும் கடல் வாழ் ஊர்வன இனத்தின் ஓடாகக் கருதப்படுகிறது.
டைனோசர்கள் நிலப்பகுதியில் சுற்றித் திரிந்த காலத்தில் ப்ளியோசர்கள் பூமியில் உள்ள பெருங்கடல் பகுதிகளில் காணப்பட்டன.