கித்தூரின் இராணி சென்னம்மா 1778 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதியன்று, கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ககாதி எனுமிடத்தில் பிறந்தார்.
தனது கணவர் இறந்த பிறகு, அவர் கித்தூரின் அரியணைக்கு வாரிசாக வேண்டும் என்ற நோக்கத்தில் சிவலிங்கப்பாவை தத்தெடுத்தார்.
ஆங்கிலேயர்கள் சிவலிங்கப்பாவை 'வாரிசிழப்புக் கோட்பாட்டின்' கீழ் ஒரு வாரிசாக அங்கீகரிக்க மறுத்ததால் அது கிளர்ச்சிக்கு வழிவகுத்தது.
1824 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதல் போரில் ஆங்கிலேயர்கள் தோல்வியடைந்தாலும், பின்னர் சென்னம்மா 1829 ஆம் ஆண்டில் சிறை பிடிக்கப்பட்டு சாகும் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.