TNPSC Thervupettagam

இராணி துர்காவதியின் 500வது பிறந்தநாள்

October 17 , 2023 259 days 203 0
  • இராணி துர்காவதி அவர்களின் 500வது பிறந்தநாளானது அக்டோபர் 05 ஆம் தேதி அன்று மத்திய அரசினால் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
  • மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் அவருக்குப் பிரம்மாண்டமான நினைவிடத்தினை அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
  • அவரது நினைவாக தபால் தலை மற்றும் வெள்ளி நாணயம் ஆகியவை வெளியிடப் பட்டன.
  • அவர் 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கோண்டுவானாவின் இராணியாக ஆட்சி செய்தார்.
  • 1548 ஆம் ஆண்டில் அவரது கணவர் தல்பத் ஷா மறைந்ததையடுத்து இராணி துர்காவதி அவர்கள் அப்பேரரசினை ஆட்சி செய்தார்.
  • அவர் ரானிடால், செரிட்டால், அதர்தால் போன்ற நீர்த்தேக்கங்களைக் கட்டமைத்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்