TNPSC Thervupettagam

இராணுவ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் - GSAT - 7A

December 21 , 2018 2166 days 649 0
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து தகவல் தொடர்பு செயற்கைக்கோளான GSAT-7A-ஐ வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.
  • இது புவியிணக்க செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தினால் (GSLV - Geosynchronous Satellite Launch Vehicle) விண்ணில் செலுத்தப்பட்டது.
  • F11 எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டமானது GSLV ராக்கெட்டின் 13-வது ஏவுதலாகும்.
    • F11 என்பதில் F என்பது செயல்பாட்டு விமானத்தைக் குறிக்கும்.
    • D - என்பது மேம்படுத்தப்படும் விமானத்தைக் குறிக்கும்.
  • உயர் தொழில்நுட்ப தகவல் தொடர்பு செயற்கைக்கோளான GSAT-7A ஆனது கிரிகோரியன் ஆண்டெனா உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது ஆகும்.
  • முக்கியமாக இராணுவப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் இது இஸ்ரோவின் 39-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும்.
  • இஸ்ரோவின் GSAT-7A ஆனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சினுடன் கூடிய மிக அதிக எடையுள்ள (2250 கிலோ) செயற்கைக் கோளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்