அமைச்சரவையின் நியமனக் குழுவானது, இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே ஓய்வு பெறும் தேதியைத் தாண்டி, 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை பதவி வகிப்பதற்கு மேலும் ஒரு மாத கால பதவி நீட்டிப்பை வழங்கியுள்ளது.
பொதுவாக, படைப்பிரிவுத் தலைவர்களின் பதவிக்காலம் 62 வயது அல்லது மூன்று ஆண்டுகள் இவற்றில் எது முந்தையதோ அதுவாகக் கருதப்படும்.
இது போன்ற நிகழ்வு கடந்த காலத்தில் ஒருமுறை மட்டுமே நிகழ்ந்துள்ளது.
1975 ஆம் ஆண்டு இராணுவத் தளபதி ஜெனரல் G.G. பேவூரின் பதவிக் காலத்தினை இந்திரா காந்தி தலைமையிலான அரசு ஓராண்டு வரை நீட்டித்து உத்தரவிட்டது.