TNPSC Thervupettagam

இராணுவ மருத்துவப் படை நிறுவன தினம் - ஏப்ரல் 03

April 5 , 2022 875 days 389 0
  • இராணுவ மருத்துவப் படையின் நிறுவன தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • வங்காள மாகாண மருத்துவச் சேவை ஆனது 1764 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று நிறுவப் பட்டது.
  • இது இந்தியாவில் உள்ள மூன்று மாகாணங்களின் முதல் ராணுவச் சேவை அமைப்பு ஆகும்.
  • இந்திய மருத்துவச் சேவை, இந்திய மருத்துவத் துறை மற்றும் இந்திய மருத்துவ மனைப் படை ஆகியவை இணைக்கப்பட்டு 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 ஆம் தேதி அன்று இந்திய இராணுவ மருத்துவப் படை உருவாக்கப்பட்டது.
  • இந்திய ராணுவ மருத்துவப் படையானது சுதந்திரத்திற்குப் பிறகு  ராணுவ மருத்துவப் படை என மறுபெயரிடப்பட்டது.
  • இராணுவ மருத்துவப் படையின் முழக்கம் சர்வே சாந்து நிராமயா (அனைவரும் நோய் மற்றும் இயலாமையிலிருந்து விடுபடலாம்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்