அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2020 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தின் கீழ் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ஒரு இராணுவத் தளத்தில் அமெரிக்க இராணுவ ‘விண்வெளிப் படையை’ அதிகாரப் பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.
இந்த விண்வெளிப் படையானது அந்நாட்டில் உள்ள ஆயுதப் படைகளின் ஆறாவது கிளையாக அமைய இருக்கின்றது.
இது விமானப் படையின் ஒரு பகுதியாக இருக்கும்.
விண்வெளிப் படை பற்றி
ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளைப் போலவே விண்வெளியினை ஒரு "போர் நடத்துவதற்கு உகந்த களமாக" மாற்றுவதற்கான முயற்சிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
விண்வெளிப் படையின் முக்கியக் குறிக்கோளானது விண்வெளிக் களத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை விரிவாக்குவதாகும்.